திங்கள், 12 மார்ச், 2018

பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு - பகுதி -10 ( முற்று)

பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு.

பகுதி -10 ( முற்று) லக்னம் தெரியாதவர்கள் ( ஜாதகம் இல்லாதவர்கள்).
ஞாயிற்றுக்கிழமை நாளில் ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, நாகலிங்கம் மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, எள் கலந்த சாதம் படையலிட்டு, இனிப்பு பதார்த்தம், பழங்கள், பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது தானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பித்ரு தோஷம் நிவர்த்தியடைந்து விட்டால் மட்டும் போதாது. பித்ரு தோஷத்திற்கு வழி தரும் செயல்களை செய்யகூடாது, முன்னோர்களை நிந்தனை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.
இது பொது பரிகாரம், இதை எவர் வேண்டுமானாலும் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக