சனி, 17 பிப்ரவரி, 2018

கோச்சாரம்.

கோச்சார பலன்களை பற்றி பலரும் என்னிடத்தில் (கேட்ட) கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில் இந்த பதிவு இருக்கும்.
கோச்சாரம் = கோள் (கிரகம்) + சாரம்(பயணம் செய்யும் பாதை). ஒரு கிரகம் தான் பயணம் செய்யும் பாதையை வைத்து பலன்கள் கூறும் விதமே கோச்சார பலன்கள் ஆகும்.
அவைகள் பயணம் செய்யும் பாதைகள் தன் நட்சத்திரங்கள். இதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு. இதில் பயணம் செய்யும் போது ஒருசில ராசிகளின் மீது அவைகளின் பார்வை (கதிர்வீச்சு) படும், அது நம் ராசிக்கு எந்தெந்த பாவங்களின் மீது விழுகிறது அதை பெருத்து நல்ல/ தீய பலன்கள் கிடைக்கும். (குருவின் பார்வை என்று கூறுவார்கள் அல்லவா அது போல)
இதில் ஒரு கிரகத்தை மட்டுமே வைத்து எந்த பலன்களையும் கூற முடியாது. ஏனென்றால் ஒரு கிரகத்தால் வரும் நன்மை தீமைகள் மற்ற கிரகங்களின் பார்வையால், சேர்க்கையால் மாறிவிடும்.

கோச்சாரம் கிரகங்கள் மற்றும் நம் பிறக்கும் போது இருந்த கிரகங்களும் (கிரகம் இருந்த இடம்) சந்திக்கும் நிகழ்வு தான் நாம் நம் வாழ்வில் சந்திக்கும் பலபலன்கள் ஆகும். ( கிரகங்கள் சுற்றி கொண்டே தான் இருக்கும், நாம் பிறந்த போது இருக்கும் இடத்தை கட்டுவது தான் ஜாதகம்.)
இவை அனைத்தையும் தண்டி ஒரு கிரகத்தால் சில/பல தீமைகளை தனித்து நின்று தர முடியும் என்று சில பாவங்கள் உண்டு.
அவைகளை கடும் கேடு செய்யும் இடங்கள் / ஸ்தானங்கள் என்று கூற முடியும்.
அவை சந்திரன் நின்ற ராசிக்கு ( நம் ஜென்ம ராசிக்கு இந்த ஸ்தானங்கள் ஆகும்.
ஜென்ம ராசியில் (1ல்) சனி சஞ்சரிக்கும் காலம்.
ஜென்ம ராசிக்கு 3ஆம் இடத்தில் குரு சஞ்சரிக்கும் காலம்.
ஜென்ம ராசிக்கு 4ஆம் இடத்தில் புதன் சஞ்சரிக்கும் காலம்.
ஜென்ம ராசிக்கு 5ஆம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம்.
ஜென்ம ராசிக்கு 6ஆம் இடத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கும் காலம்.
ஜென்ம ராசிக்கு 7ஆம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும் காலம்.
ஜென்ம ராசிக்கு 8ஆம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம்.
ஜென்ம ராசிக்கு 9ஆம் இடத்தில் ராகு சஞ்சரிக்கும் காலம்.
ஜென்ம ராசிக்கு 11ஆம் இடத்தில் கேது சஞ்சரிக்கும் காலம்.
இந்த காலங்களில் கடும் கேடு (மிக உக்கிரமான தீய பலன்கள் நடைபெறும்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக