கோயில்கள் பரிகார ஸ்தலங்கள் மட்டும்தானா?
இன்றைய காலகட்டத்தில் மக்கள் கோயிலுக்கு செல்லும் நோக்கமே மாறியுள்ளது.
கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் ஒவ்வொருவரையும் நீங்கள் ஏன் கோயிலுக்கு வருகிறீர்கள்? என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்தை சொல்கிறார்கள். அதாவது என் மகனுக்கு சீக்கிரம் வேலை கிடைக்கவேண்டும்,என் மகளுக்கு மாமியார் தொல்லை இல்லாத நல்ல திருமண வாழ்க்கை அமையவேண்டும் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். அதிலும் இந்த பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கிவிட்டால் கேட்கவே வேண்டாம். இவையெல்லாம் எங்கே போய் முடியும் என்றால் கடவுள் மீது ஒரு வெறுப்பில் சென்றுதான் முடியும். ஏனெனில் நீங்கள் வேண்டிய பலன் ஓரிரு மாதங்களில் துரிதமாக கிடைக்கவேண்டும். இல்லையேல் ஆமா அந்த கோயில் சாமிக்கு நா எவ்வளவோ பூஜை செஞ்சேன் ஜோதிடர் என்னென்ன பரிகாரம் சொன்னாரோ அத்தனையும் ஒன்னுவிடாம செஞ்சேன் ஆனா ஒரு சாமியும் என்னோட வேண்டுதல நிறைவேற்றல. இப்படிப்பட்ட எண்ணங்கள் வர ஆரம்பித்துவிடும்.
இதற்கு என்ன காரணம்?
வாரநாட்களில் பார்த்தோமானால் வியாழன் மற்றும் சனிக்கிழமையில் தான் கோயில்களுக்கு பக்தர்கள் அதிக அளவில் செல்வதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இந்நாட்களில் கோயில்களில் பார்த்தோமானால் கடலை மாலைகளாலும், எள் விளக்குகளாலும் அந்த சன்னிதிகள் தினறிக்கொண்டிருக்கும். அதிலும் கூட சில மக்கள் எள் விளக்கு வாங்குவார்கள். நவகிரக சன்னிதியில் ஏற்றுவார்கள். 9 சுற்று சுற்றுவார்கள்.அப்படியே சென்றுவிடுவார்கள். அது என்ன கோயில், அங்கே யார் மூலவர்?இதெல்லாம் அவருக்கு தேவையற்றது.
சூப்பர் மார்கெட்டில் தனக்கு தேவையான பொருளை எடுப்பதுபோல எனக்கு அஷ்டம சனி/ஏழரைசனி அதனால சனிக்கிழமையில் சனிபகவானுக்கு எள்விளக்கு போடச்சொல்லி ஜோசியர் சொன்னார். எனவே போட்டுட்டுபோரேன். (அதிலும் பலர் கைகளில் ஏந்தியபடி சுற்றி வருவார்கள், கைகளில் ஏந்தி செல்லும்போது விளக்கு திரியில் இருக்கும் தேவதை சாபம் கிடைக்கும்)
அவர்களை கேட்டால் இதான் பதிலாக இருக்கும்.
அதற்கு காரணம் மக்களின் பேராசை, சில ஜோதிடர்களின் அறியாமை.
விளக்கு ஏற்றுவது சரியா?
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் பார்த்தோமானால் இப்பழக்கம் மக்களிடம் குறைவாகவே காணப்பட்டது. குறிப்பாக சென்னை தவிர பிறமாவட்டங்களில் இப்பழக்கம் மிகக்குறைவே.
ராகு காலத்தில் துர்கைக்கு மட்டுமே பெண்கள் இந்த விளக்கு ஏற்றும் பழக்கத்தை கொண்டிருந்தனர் அதுவும் பரிகார ரீதியாகத்தான். ஆனால் இன்று தினசரி கோயிலுக்கு சென்றாலே அக்கோயிலில் எத்தனை சன்னிதி உள்ளதோ அத்தனை விளக்கு ஏற்றுவது என்ற பழக்கம் மக்களிடையே காணப்படுகிறது.இதனால் ஒவ்வொரு சன்னதிகளும் அதிக அகல் விளக்குகளாலும்,எண்ணை சிதறல்களாலும்,அழுக்குகளாலும் அலங்கோலமாக்காணப்படுகிறது. கோயிலில் இறை அருளைப் பெற வருகிறவர்கள் அங்கே அசுத்தத்தை ஏற்படுத்துவதால் அவர்கள் வழிபாடுகள் பலன் அளிக்காமல் கூட போகலாம். இதற்கு என்ன மாற்று என நாம் யோசித்தால்
1.நீங்கள் மாதந்தோறும் ஏற்றும் அகல்தீப எண்ணை/நெய்யை மொத்தமாக அந்த ஆலய வசம் ஒப்படைக்கலாம். அல்லது
2.இதற்காக நீங்கள் செலவு செய்யும் தொகையை அந்த ஆலயத்தின் மின்சார கட்டணம் செலுத்த ஒரு தொகையாக மாதந்தோறும் நீங்கள் கொடுக்கலாம். அல்லது
3.மின்விளக்குகள் வாங்கி கொடுக்கலாம்.
மேற்கண்ட மாற்று ஏற்பாடுகளில் எதை நீங்கள் கடைபிடித்தாலும் நீங்களே விளக்கு ஏற்றிய பலன் நிச்சயம் உண்டு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
ஏன் என்றால் மின்சாரம் இல்லாத காலத்தில் கோயில்களில் இருட்டு அதிகமாக இருக்கும் அதை போக்கவே விளக்குகள் ஏற்றுவது பழக்கமாக இருந்தது.
எனவே பரிகாரம் கூறும் ஜோதிடர்களும் இவ்விஷயத்தை கவனத்தில் கொள்வது அனைவருக்கும் நன்மை பயக்கும்.
இதிலே இன்னொரு விஷயத்தையும் நாம் குறிப்பிட்டாகவேண்டும்.
கோயில்களுக்கு முன்னால் கடை வைத்திருப்பவர்கள் பக்தர்கள் உள்ளே வரும்முன்னே அவர்களை மடக்கி இன்றைக்கு இந்த விசேஷம். இந்த சாமிக்கு இத்தனை விளக்கு போடனும். இந்த பூஜ பொருள் கொண்டுபோகனும்.... அப்படி இப்படி என தங்களுக்கு தெரிந்த /தெரியாத/ இல்லாத விஷயங்களை கூறி சில மக்களை ஏமாற்றிவிடும் வழக்கமும் சில இடங்களில் நான் நேரிலேயே பார்த்துள்ளேன். ஆக மக்களுக்கும் ஆலய வழிபாடுகள் பற்றி நல்ல புரிதல் தேவைப்படுகிறது. மேலும்
இதை செய்தால் இன்ன பலன் என்று கூறினால்தான் மக்கள் செய்கிறார்கள்.
தேன் அபிஷேகம் செய்தால் இன்ன பலன், பௌர்ணமி வழிபாடு செய்தால் இன்ன பலன்.
சங்கடஹர சதுர்த்திக்கு இன்ன பலன் என்று பலனை உத்தேசித்தே மக்களின் வழிபாடு காணப்படுகிறது.
ஆனால் நம் தர்மசாஸ்திரங்கள் விரதங்களையும்,பண்டிகைகளையும்,ஆலய வழிபாடுகளையும் நம் கடமைகளில் ஒரு அங்கமாகவே வைத்துள்ளது. ஒவ்வொருவழிபாடு, விரதம், பூஜைகளுக்கும் ஒரு முறையை சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதுபடி கடைபிடித்தால்தான் நமக்கு அந்த பலன் கண்டிப்பாக கிடைக்கும். காம்ய பக்தி தவறில்லை. ஆனால் 364 நாட்களும் இறை சிந்தனையே இல்லாத ஒருவன் ஒரு நாள் வைகுண்ட ஏகாதசி சொர்கவாசலை பார்தால்போதும் நாம் சொர்கம் சென்றுவிடுவோம் என நினைப்பது பேராசையின் உச்சகட்டமில்லையா?
ஏகாதசி விரதமிருக்க ஒரு முறை உள்ளது. அது படி வருடத்தின் 12 மாதங்களிலும் கடைபிடித்து சொர்கவாசல் தரிசனம் கண்டால் அவர் வைகுண்ட பதவி அடைவார் என்பது திண்ணம். அதை விடுத்து
ஃபாஸ்ட் ஃபுட் (fast food) உணவு போல கோயில்களையும் துரித பலன்தரும் கோயில்களாக நாம் மாற்ற நினைப்பது தவறு.
நீங்கள் நவகிரக வழிபாடுகளை செய்யுங்கள் தவறில்லை. அதற்காக அந்த கோயிலின் மூலவர் அப்பலன்களை தரமாட்டார் என நினைக்காதீர்கள்.
நவகிரகங்களை விட பல கோடி மடங்கு பலன் அளிக்கவல்லவை அக்கோயிலின் மூலவர் என்ற உண்மையை மறந்துவிடாதீர்கள்.
ஆதிசங்கரர் 6 மடங்களை தோற்றுவித்தார். அங்கே நவகிரகம் இல்லை.
ஏனைய சைவ ,வைணவ அடியார்களும் சிவபிரானையும் திருமாலையும் வணங்கினாலே கிரக கோளாறுகள் நீங்கும் என பாடிச்சென்றுள்ளனர்.
நிறைவாக ஒரே வார்த்தை நவகிரக தோஷம் நீங்குவதற்காக,பரிகாரம் செய்வதற்காக மட்டுமே ஆலயத்திற்கு வராதீர்கள். ஆத்மார்த்தமாக இறை சிந்தனையோடு நம் வாழ்க்கை நெறியில் அதுவும் ஒரு கடமையாக நினைத்து ஆலயத்திற்கு வாருங்கள். உங்கள் கவலைகளை ஆண்டவனிடம் இறக்கிவையுங்கள்.
அதன் பிறகு அது அவர் பொறுப்பு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக